Saturday, February 25, 2006

ஆசை...




நல்லைக் கந்தனின் மணியோசைபோல-
என்சொல்லிலே ஜீவன் வேண்டும்!
உள்ளம் என்பது வற்றிடா அன்பின்
ஊற்றுப்போல் நிலைக்க வேண்டும்!


வல்லையில் உறுதியாய் நிற்கின்ற பனைபோல
கொள்கையில் 'உறுதி' வேண்டும்.
தொல்லைகள் சூழ்ந்தாலும் தில்லையின் ராஜனாய்
துள்ளி நான் ஆட வேண்டும்.


மின்சாரம் ஓய்வு எடுகின்ற இரவிலும்
என் பேனாவில் வெளிச்சம் வேண்டும்.
மின்விசிறி சுழலாத நெருப்பு இராவிலும்
பனிக்காலப் புலமை வேண்டும்!



பொறாமையின் நெருப்பு சுடுகின்றபோது
பொறுமையின் குளுமை வேண்டும்!
சோதனை கழுத்தை வளைக்கின்ற போதும்
'போதனை' பூக்க வேண்டும்!


சோர்ந்து துவள்கின்ற வேளையில் கூட
'சத்தியம்' போற்ற வேண்டும்!
ஊர்ந்து செல்கின்ற முதுமையில் கூட
உள்ளத்தில் 'எறும்பு' வேண்டும்!


தேர்ந்து கேட்கும் இசையின் 'ஒளி'யிலே
என் ஜீவனைக் காண வேண்டும்!
தேடிப் பிடிக்கின்ற மனிதன் முகத்திலே
தெய்வத்தைத் திருட வேண்டும்!


என் முன்னிலே சிரித்து முதுகிலே ஏசிடும்
மாந்தரை வாழ்த்திட வேண்டும்.
புண்ணிய நோக்கிலே தொண்டுகள் செய்யாது
தொண்டு என் இயல்பாக வேண்டும்!



சிறியவர் பெரியவர் ஆகின்ற போது
சிரம் தாழ்த்தித் தொழுதிட வேண்டும்!
பெரியவர் 'சிறியவர்' ஆகின்ற சூழலில்
மன்னிக்கும் பக்குவம் வேண்டும்.

சூழ்ச்சிகள் அம்பு பாய்ச்சிடும் வேளை
'கீதையின் கவசம்' வேண்டும்.
வீழ்ச்சிகள் வரிசையாய் நிகழ்கின்ற போதும்
வென்று யான் நிமிர வேண்டும்!


கோடைபோல் வறுமை சுடுகின்ற போதும்
குலையாத வலிமை வேண்டும்.
கோடிகள் வந்தே குவிந்தாலும் கும்பிடும்
ஆண்டியின் தெளிவு வேண்டும்!


தூங்கிடும் வேளையும் நெஞ்சிலே அன்பு
தூங்காதிருக்க வேண்டும்.
துயரமே சூழ்ந்தாலும் கண்ணிலே கருணை
காயாதிருக்க வேண்டும்!


குணத்திலே வானத்தை நகல் செய்து வாழும்
தலைமுறை எனக்கு வேண்டும்.
சினத்திலே சமநிலை குலைகின்ற போதும்
சிக்கனம் சொல்லில் வேண்டும்.



ஓங்கிடும் புகழால் ஒரு புள்ளி கர்வம்
ஒட்டாத தலையே வேண்டும்.
தேங்கிடும் துயரிலும் 'தேக்கு' தத்துவம்
ஆக்கிடும் ஆற்றலும் வேண்டும்.


பள்ளமும் சிகரமும் சரி நிகர் சமனாகும்
என்கின்ற பக்குவம் வேண்டும்.
கொள்வதும் கொடுப்பதும் நானல்ல அவன்
என்றஎண்ணமே நிலைக்க வேண்டும்!

- யாழ் சுதாகர்



1. யாழ் சுதாகரின் காதல் கவிதைகள்...[ முதல் பகுதி ] NEW

2.
யாழ் சுதாகரின் காதல் கவிதைகள்...[பழைய தொகுதி.. புதிய படங்களுடன் ]

3.
யாழ் சுதாகரின் புகைப்படத் தோரணங்கள்... [New]

4.
எம்.ஜி.ஆரும் ஒளி விளக்கும்...

5.
.'கலைக்குரிசில்' சிவாஜி கணேசன்....

6.
.'பாட்டுக்கு ஒரு தலைவர்' டி.எம்.எஸ்...

7.
'கான சரஸ்வதி' பி.சுசீலா

8.
'சங்கீத சாகரம்' கே.ஜே.ஜேசுதாஸ்

9.
'கீத நதி 'எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

10.
தூறல்

11. கே.எஸ்.ராஜா பற்றிய ஒரு ரசிகனின் நினைவலைகள்...

12.
பாகவதர் முதல் பாலசுப்பிரமணியம் வரை...



13.யாழ் சுதாகர்....வானொலி நிகழ்ச்சிகளைப் பாராட்டி இந்திய நேயர்கள் எழுதிய கடிதங்கள்




யாழ் சுதாகர் பதில்கள்

யாழ் சுதாகர் ...சிந்தனைகள்

யாழ் சுதாகர்..சில குறிப்புகள்






YAZHSUTHAKAR,YAZH SUTHAKAR,YAZHSUTHAHAR, YAZH SUTHAHAR,
YAZHSUDHAKAR,YAZH SUDHAKAR,YAZH SUDHAGAR,YARL SUTHAHAR,YARL SUTHAKAR,YARL SUDHAKAR,
TMS SONGS,T.M.SOUNTHARARAJAN SONGS,T.M.SOUNDARARAJAN SONGS,MGR SONGS,SIVAJI SONGS,KANNATHASAN SONGS,KANNADASAN SONGS,SPB TAMIL SONGS,K.J.JESUTHAS TAMIL SONGS,S.JANAKI TAMIL SONGS,S.JANAKI SONGS,TAMIL OLD SONGS,VANI JEYARAM SONGS,VAANI JEYARAM SONGS,KAMAL SONGS

yarl suthahar,yarl suthakar,yarl suthagar,yarl sudhakar,yaal suthakar,yaal suthahar,yaal sudhakar,yazh suthahar,yazh suthagar,yazh sudhakar,yaazh sudhakar,yaazh suthakar,yaazh suthahar,yal sudhakar,yal suthakar,yal suthakar,yal suthagar,tamil poems, kavithaikal,kavithaigal,tamil internet radio
yaalppaanam suthakar,yalpanam suthakar,yaalppaanam sudhakar,yalpanam sudhakar
yarlsuthahar,yarlsuthakar,yarlsuthagar,yarlsudhakar,yaalsuthakar,yaalsuthahar,
yaalsudhakar,yazhsuthahar,yazhsuthagar,yazhsudhakar,yaazhsudhakar,yaazhsuthakar,
yaazhsuthahar,yalsudhakar,yalsuthakar,yalsuthakar,yalsuthagar,
yaalppaanamsuthakar,yalpanamsuthakar,yaalppaanamsudhakar,yalpanamsudhakar

1 comments:

Anonymous said...

Yarl Suthakar simply Superb Simply Awesome


Vaarthigal illai unglai patri solluvathargu.


May Ur Dreams Come True.

N.Gokula---Chennai