
'முப்பது வயதென்றாலும்
எப்பவும் நீயெனக்கு
பத்து வயதுக் குழந்தையெடா'
என்று சொல்லி விட்டு...
சில மாதங்களிலேயே
படமாகிப் போன அப்பாவின் பாசத்தில்....
எங்கள் கல்விக்காக
தன் வசந்தங்களை வழியனுப்பி வைத்த
அம்மாவின் தியாகங்களில்....
அவசர வாழ்க்கையில்
அமிழ்ந்து நான் மறந்தாலும்
வெளி நாட்டிலிருந்து
மறவாது எனைத் தொடரும்
தங்கையின் வாழ்த்து மடல்களில்....
என் மகுடம் போன சமயத்திலும்
தேடி வந்து'.....
நாங்கள் இருக்கின்றோம்' என்று
ஞாபகப்படுத்திச் சென்ற
ஒரு சில நண்பர்களின் குரலில்....
கடும் தவம் ஏதுமின்றி
கடவுளை யான் கண்டேன்!
- யாழ் சுதாகர்
1 comments:
நண்பரே,
மிகவும் பிரமாதமான கவிதை.
அன்புடன்
ராஜ்குமார்
Post a Comment